Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பள்ளிச் சீருடையில் இருந்த மாணவருக்கு சிகரெட் விற்ற கடையின் உரிமம் ரத்து

சிராங்கூனில், பள்ளிச் சீருடையில் இருந்த 17 வயது மாணவர் ஒருவருக்கு சிகரெட் விற்ற கடையொன்றின் புகையிலை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

வாசிப்புநேரம் -

சிராங்கூனில், பள்ளிச் சீருடையில் இருந்த 17 வயது மாணவர் ஒருவருக்கு சிகரெட் விற்ற கடையொன்றின் புகையிலை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

சுகாதார, அறிவியல் ஆணையம் அதனைத் தெரிவித்தது.
301, சிராங்கூன் அவென்யூ 2-இல் செயல்படும் வேல்யூ சூப்பர்மார்க்கெட் என்னும் கடை இனிமேல் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய முடியாது என ஆணையம் குறிப்பிட்டது.

இவ்வாண்டு மே மாதத்துக்கும் ஜூலை மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், மேலும் 12 சில்லறை விற்பனைக் கடைகளின் புகையிலை விற்பனை உரிமம் தற்காலிகமாக 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது.
18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்குப் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது அதற்குக் காரணம். அந்த 12 சில்லறை விற்பனைக் கடைகளின் பட்டியல்.

Sri Kumaran Mini Mart at 557 Jurong West Street 42
326 Coffee Shop at 326 Woodlands Street 32
151 Coffee & Tea at 151 Serangoon North Avenue 2
Angel Supermart at 326 Woodlands Street 52
Kopitiam Investment Pte Ltd at 108 Punggol Field
H & N Mini-Mart at 620 Hougang Avenue 8
Good Price Hub at 135 Jurong Gateway Road
Chin Ju Heng Mini Supermarket at 835 Tampines Street 83
Jaya Ambiga Trading Pte Ltd at 176 Boon Lay Drive
Zeng Mao Sheng at 716 Yishun Street 71
Fortune Supermarket at 780 Woodlands Crescent
Zhong Guo Chao Shi at 418 Yishun Avenue 11

18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்குப் புகையிலைப் பொருட்களை விற்றுப் பிடிபடுவோர் S$5,000 அபராதம் கட்டவேண்டியிருக்கும். ஆறு மாதம், உரிமம் ரத்து செய்யப்படும்.

மறுபடியும் அந்தத் தவற்றைச் செய்தால் S$10,000 அபராதம் கட்டவேண்டியிருக்கும். மேலும் புகையிலைப் பொருள் விற்பனை உரிமம் மீட்டுக்கொள்ளப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்