Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலை அனுமதி விண்ணப்பங்களில் பொய்யான தகவல்: சகோதரிகள் இருவருக்கு அபராதம்

வேலை அனுமதி விண்ணப்பங்களில் பொய்யான தகவலைக் கொடுத்ததற்காக, சகோதரிகள் லியோங் சியூ பெங், லியோங் சாவ் யீ ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: வேலை அனுமதி விண்ணப்பங்களில் பொய்யான தகவலைக் கொடுத்ததற்காக, சகோதரிகள் லியோங் சியூ பெங், லியோங் சாவ் யீ ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்திருக்கிறது.

செப்டம்பர் 2014லும்  ஆகஸ்ட் 2016லும்  அவர்கள் இருவரும், வெளிநாட்டுப் பணிப்பெண்களை வேலையில் அமர்த்துவதற்கான விண்ணப்பங்களைச் செய்தனர்.

ஆனால் அந்த ஊழியர்களை, அழகு நிபுணர்களாகப் பணியில் அமர்த்த அந்தச் சகோதரிகள் திட்டமிட்டிருந்ததாக அமைச்சு கூறியது.

இந்தியக் குடிமக்களான 33 வயது லெப்சு ரிட்டு, ஆர்த்தி ஆகியோர், வேலை அனுமதிக் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் பொய்யான தகவல்களைக் கொடுத்ததாகவும் செல்லுபடியான வேலை அனுமதியில்லாமல் வேலை செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

நீதிமன்றம் சியூ பெங்கிற்கு 15,500 வெள்ளி அபராதத்தை விதித்தது. சாவ் யீக்கு 16,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.  அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆளுக்கு 6 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

செல்லுபடியான வேலை அனுமதி இல்லாத வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் 5,000 வெள்ளி முதல் 30,000 வெள்ளி வரையிலான அபராதத்தை எதிர்நோக்குவர். அத்துடன் அவர்களுக்கு 12 மாதம் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மீண்டும் அந்தக் குற்றத்தைப் புரிவோருக்குத் தண்டனை அதிகரிக்கப்படும். அவர்களுக்குக் கட்டாய சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

செல்லுபடியாகும் வேலை அனுமதியின்றி வேலை செய்யும் வெளிநாட்டவருக்கு 20,000 வெள்ளி வரையிலான அபராதமும் ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்