Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் ஆமைக்குஞ்சுகள்

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் திக்குத் தெரியாமல் தவித்த ஆமைக் குஞ்சுகளைக் கடலுக்குள் சேர்க்க தேசியப் பூங்காக் கழகத்தினரும் பொதுமக்களில் சிலரும் உதவியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் ஆமைக்குஞ்சுகள்

(படம்: NParks)

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் திக்குத் தெரியாமல் தவித்த ஆமைக் குஞ்சுகளைக் கடலுக்குள் சேர்க்க தேசியப் பூங்காக் கழகத்தினரும் பொதுமக்களில் சிலரும் உதவியுள்ளனர்.

கடற்கரையில் இருந்த அவற்றை சாலைவிளக்குகள் அலைக்கழித்தன. எங்கு செல்வதென்று புரியாமல் குழம்பின ஆமைக்குஞ்சுகள்.

பின்னர் தேசியப் பூங்காக் கழக அதிகாரிகளும் பொதுமக்களும் அவற்றைக் கடலுக்குள் கொண்டுசேர்த்தனர். Facebookஇல் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், சிலர் தங்கள் திறன்பேசிகளில் உள்ள விளக்குகளின் உதவியோடு ஆமைக் குஞ்சுகளுக்கு வழிகாட்டினர்.

கரையில் கிடந்த 32 ஆமைக் குஞ்சுகளையும் கடல்சேர்க்க உதவிய பொதுமக்களுக்கு தேசியப் பூங்காக் கழகம் பாராட்டு தெரிவித்தது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்