Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சூதாட்டச் சேவைகளை நடத்திய கும்பல் கைது

$4,000 பெறுமானமுள்ள ரொக்கம், கணினி, கைத்தொலைபேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

வாசிப்புநேரம் -
சூதாட்டச் சேவைகளை நடத்திய கும்பல் கைது

( படம் : சிங்கப்பூர்க் காவல்துறை)

செயலி மூலமாக எந்த இடத்திலிருந்தும் இயங்கக்கூடிய சூதாட்டச் சேவைகளை வழங்கியதாகவும் அதில் பங்கேற்றதாகவும் சந்தேகிக்கப்படும் கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.

ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்கிய  கும்பல், கேளிக்கை விடுதியில் பணிபுரிந்த ஊழியர்கள் ஆவர்.

WeChat சமூக ஊடகத் தளத்தில் இயங்கும் "நியு நியு" என்ற செயலி வாயிலாக அவர்கள் சூதாட்டச் சேவைகளை வழங்கினர்.

$4,000 பெறுமானமுள்ள ரொக்கம், கணினி, கைத்தொலைபேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணை தொடர்கிறது.

உரிமமில்லாத சூதாட்டச் சேவைகளை வழங்குவோருக்கு $5,000 வரையிலான அபராதமும் ஆறு மாதச் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். 

எந்த இடத்தில் இருந்தும் இயங்கும் சூதாட்டச் சேவைகளை
வழங்குவோருக்கு $20,000 முதல் $200,000 வரையிலான அபராதமும் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்