Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பார்சலோனா தாக்குதலுக்கு சிங்கப்பூர்த் தலைவர்கள் கண்டனம்

ஸ்பெயினின் பார்சலோனா நகரில் நடந்த தாக்குதலின் தொடர்பில் சிங்கப்பூர்த் தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். 

வாசிப்புநேரம் -
பார்சலோனா தாக்குதலுக்கு சிங்கப்பூர்த் தலைவர்கள் கண்டனம்

( படம் : AFP/Josep Lago )

ஸ்பெயினின் பார்சலோனா நகரில் நடந்த தாக்குதலின் தொடர்பில்
சிங்கப்பூர்த் தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம், மன்னர் ஃபிலிப்பிற்கு எழுதிய கடிதத்தில், நடந்த சம்பவத்தினால் துயரடைந்திருப்பதாகக் கூறினார்.

அப்பாவிப் பொதுமக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலை சிங்கப்பூர் கண்டிக்கிறது என்று டாக்டர் டான் சொன்னார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் ஸ்பெயினுடன் இணைந்து நிற்பதாய்க் கூறினார் அதிபர் டான்.

பாதிக்கப்பட்டோருக்கு சிங்கப்பூரின் அரசாங்கம் அதன் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகப் பிரதமர் லீ சியென் லூங், ஸ்பெயினின் பிரதமர் மரியானோ ராஜோய்க்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்