Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மீடியாகார்ப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி - திருவாட்டி தாம் லோக் கெங்

திருவாட்டி தாமின் நியமனம் அடுத்த மாதம் முதல் தேதி நடப்புக்கு வருகிறது.

வாசிப்புநேரம் -
மீடியாகார்ப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி - திருவாட்டி தாம் லோக் கெங்

(படம் : மீடியாகார்ப்) (மீடியாகார்ப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி - திருவாட்டி தாம் லோக் கெங்)

மீடியாகார்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகத் திருவாட்டி தாம் லோக் கெங் நியமிக்கப்பட்டுள்ளார். 

நிர்வாகக் குழு இயக்குநராகவும் அவர் பொறுப்பு வகிப்பார். திருவாட்டி தாமின் நியமனம் அடுத்த மாதம் முதல் தேதி நடப்புக்கு வருகிறது.
மீடியாகார்ப் நிறுவனம் இன்று அதனை அறிவித்தது.

திருவாட்டி தாம், தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ஷான் சியாவுக்குப் பதிலாக அந்தப் பதவியை ஏற்பார்.

திரு. ஷான் அடுத்த மாதம் முப்பதாம் தேதி வரை நிர்வாக இயக்குநராக நீடிப்பார். பின்னர் அவர் துமாசிக் நிறுவனத்தில் சேரவிருக்கிறார்.

ஊடகத் துறையில் பழுத்த அனுபவம் பெற்றவர் திருவாட்டி தாம். சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகத்தில் 1988ஆம்  ஆண்டு தொடங்கி 8 ஆண்டு பணியாற்றியவர் அவர்.

பின்னர் தைவான், ஹாங்காங் உட்பட ஆசியாவின் முன்னணித் தொலைக்காட்சி, விரிவலைச் சேவை நிறுவனங்களில் திருவாட்டி தாம் மூத்த நிர்வாக, தலைமைத்துவப் பொறுப்புகளையும் வகித்திருக்கிறார்.

மீண்டும் மீடியாகார்ப்பிற்குத் திரும்புவது அர்த்தமுள்ளதாய் இருப்பதாகத் திருவாட்டி தாம் குறிப்பிட்டார்.

கட்டணமில்லா ஒளிபரப்பு நிறுவனம் என்ற நிலையிலிருந்து மின்னிலக்க ஊடகத்துக்கு முன்னுரிமை அளிக்கும் ஒன்றாக மீடியாகார்ப் உருமாறுகிறது; இந்தத் தருணத்தில் அடுத்த கட்ட மேம்பாட்டில் நிறுவனத்தை வழிநடத்த ஆர்வமாய் இருப்பதாகத் திருவாட்டி தாம் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்