Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வரும் 21ஆம் தேதி முதல், அனைத்து SBS டிரான்சிட் பேருந்துகளில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோருக்கான வசதிகள்

வரும் 21ஆம் தேதி முதல், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர், பேருந்து நிறுத்தங்களிலும், பேருந்து முனையங்களிலும் தடையின்றிப் பேருந்துகளில் ஏற நிறுவனம் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும்.

வாசிப்புநேரம் -
வரும் 21ஆம் தேதி முதல், அனைத்து SBS டிரான்சிட் பேருந்துகளில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோருக்கான வசதிகள்

( படம் :Today )

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர் வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து SBS டிரான்சிட் பேருந்து சேவைகளில் பயணம் செய்ய முடியும்.

சேவை எண்கள் 8, 23, 46, 81, 160, 170, 191, 401 , 655 ஆகியவை சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோருக்கு ஏதுவாக மாற்றப்படும் என்று பேருந்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் உட்பட அனைத்துப் பயணிகளையும் உள்ளடக்கிய பொதுப் போக்குவரத்து முறையை வழங்க நிறுவனம் கடப்பாடு கொண்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி (Gan Juay Kiat) கான் ஜுவே கியாட் கூறினார்.

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர், பேருந்து நிறுத்தங்களிலும், பேருந்து முனையங்களிலும் தடையின்றிப் பேருந்துகளில் ஏற நிறுவனம் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும்.

அதன் தொடர்பில் நிலப்போக்குவரத்து ஆணையத்துடன் அணுக்கமாகச் செயல்படவிருப்பதாகவும் திரு கான் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்