Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இணைய மோசடி தொடர்பில் மாது கைது

செந்தோசாவில் உள்ள Universal Studios Singapore கேளிக்கைப் பூங்கா, Hard Rock சொகுசு ஹோட்டல் ஆகியவற்றுக்கான நுழைவுச் சீட்டுகளை வாங்க விரும்பியவர்களை ஏமாற்றிய சந்தேகத்தின் பேரில் 20 வயது மாது கைது செய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
இணைய மோசடி தொடர்பில் மாது கைது

(படம்: Alvin Chong))

சிங்கப்பூர்: செந்தோசாவில் உள்ள Universal Studios Singapore கேளிக்கைப் பூங்கா, Hard Rock சொகுசு ஹோட்டல் ஆகியவற்றுக்கான நுழைவுச் சீட்டுகளை வாங்க விரும்பியவர்களை ஏமாற்றிய சந்தேகத்தின் பேரில் 20 வயது மாது கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன் தொடர்பில், கடந்த வியாழக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடைப்பட்ட காலத்தில் புகார்கள் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

Carousell இணையத்தளத்தில் அந்த நுழைவுச்சீட்டுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.

ஆனால், நுழைவுச்சீட்டுகளுக்குக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு அவை கிடைக்கவில்லை.

விற்பனையாளரையும் அவர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை.

சந்தேக நபரை அடையாளங்கண்டு காவல்துறை நேற்று முன்தினம் அவரைக் கைது செய்தது.

மோசடிக் குற்றத்திற்காக இன்று அவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்