Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ரயில் சேவைத் தடைக்குக் காரணம் தண்ணீர் கசிவு

கிட்டதட்ட 7 மணி நேரம் நீடித்த பூமலை ரயில் நிலைய சேவைத் தடைக்குக் காரணம், தண்ணீர் கசிவு என SBS Transit நிறுவனம் கூறியுள்ளது.  

வாசிப்புநேரம் -

கிட்டதட்ட 7 மணி நேரம் நீடித்த பூமலை ரயில் நிலைய சேவைத் தடைக்குக் காரணம், தண்ணீர் கசிவு என SBS Transit நிறுவனம் கூறியுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் அச்சம்பவம் நடந்தது.

தண்ணீர் கசிவினால், தண்டவாளத்திலுள்ள ஓர் கதவின் மின் பாகங்கள் சேதமடைந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாய் SBS Transit நிறுவனம் சொன்னது.

கதவிற்கு மேலுள்ள ஓட்டையிலிருந்து தண்ணீர் கசிந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, ரசாயனத்தைப் பயன்படுத்தி ஓட்டை அடைக்கப்பட்டுள்ளதாய் நிறுவனம் தெரிவித்தது.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் கதவின் செயல்பாடு சோதிக்கப்பட்டதாக அது கூறியது.

அப்போது எவ்வித கோளாறும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சம்பவத்தைத் தொடர்ந்து, டௌன்டவுன் பாதை, வடகிழக்குப் பாதையிலுள்ள அனைத்து கதவுகளும் சோதிப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் சொன்னது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்