Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காட்டுத்தீ சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரம் : அமைச்சர் மசகோஸ்

ஆசியான் வட்டாரத்திற்கான இவ்வாண்டின் புகைமூட்ட அளவுகள் கடந்தாண்டைப் போலவே இருக்கும் வாய்ப்புள்ளதாக இந்தோனேசியா அதன் அண்டை நாடுகளிடம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

ஆசியான் வட்டாரத்திற்கான இவ்வாண்டின் புகைமூட்ட அளவுகள் கடந்தாண்டைப் போலவே இருக்கும் வாய்ப்புள்ளதாக இந்தோனேசியா அதன் அண்டை நாடுகளிடம் தெரிவித்துள்ளது.

புகைமூட்டத் தடுப்பு நடவடிக்கைகளைப் பரிசீலனை செய்வதற்கு ஆசியான் அமைச்சர்களும் மூத்த அதிகாரிகளும் கோலாலம்பூரில் சந்தித்துள்ளனர்.

2020ஆம் ஆண்டுக்குள் புகைமூட்டமற்ற வட்டாரத்தை உருவாக்கும் முயற்சிகள் திட்டமிட்டபடி நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புகைமூட்டமற்ற ஆசியானை உருவாக்குவதற்கான உடன்பாட்டில் அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகளும் கடந்தாண்டு கையெழுத்திட்டன.

அதன் தொடர்பிலான செயல்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தற்போதைய கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லந்து, புருணை ஆகியவற்றின் அமைச்சர்கள் அது பற்றி கலந்துரையாடினர்.

செயல்திட்டங்கள் பலனளிக்கத் தொடங்கியிருப்பதாக மலேசியச் சுற்றப்புற அமைச்சர் திரு. வான் ஜுனாய்டி குறிப்பிட்டார்.

கடந்தாண்டில் புகைமூட்டம் வெகுவாக குறைந்ததை அவர் சுட்டினார்.

செயல்திட்டங்களின் முன்னேற்றம் பற்றிய இடைநிலை ஆய்வொன்றை அடுத்தாண்டில் நடத்த ஆசியான் நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக சிங்கப்பூரின் சுற்றுப்புற நீர்வள அமைச்சர் திரு. மசகோஸ் சுல்கிஃப்லீ கூறினார்.

புகைமூட்டத்தை ஏற்படுத்தும் காட்டுத்தீ சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளும் தீவிரம் கண்டுள்ளதை அவர் சுட்டினார்.

காட்டுத் தீயை மூட்டும் குற்றவாளிகள் சிங்கப்பூரின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களாக இருந்தால், அவர்களைக் கைது செய்து, சட்டநடவடிக்கைகளைக் குடியரசு மேற்கொள்ளும் என திரு. மசகோஸ் குறிப்பிட்டார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்