Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தீச் சம்பவங்கள் குறைந்தன. மின் ஸ்கூட்டர் மின்கலன்கள் பற்றியெறியும் சம்பவங்கள் அதிகரித்தன

இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் தீச் சம்பவங்களின் எண்ணிக்கைக் குறைந்திருந்ததாய் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் தீச் சம்பவங்களின் எண்ணிக்கைக் குறைந்திருந்ததாய் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

கிட்டதட்ட 1300 சம்பவங்கள் பதிவாயின. அது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் சுமார் 200 சம்பவங்கள் குறைவு. அதாவது 15 விழுக்காடு குறைவு.

ஆனால், மின் ஸ்கூட்டர்கள், தனிநபர் நடமாட்ட கருவிகள் ஆகியவற்றிலுள்ள மின்கலன்கள், மின்னூட்டுக் கருவிகள் ஆகியவை தீப்பற்றி எறியும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சுட்டியது.

அது 13ஆக பதிவாகியது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் அது 5 சம்பவங்கள் அதிகம்.

இரவு முழுவதும் தொடர்ந்து சாதனங்களுக்கு மின்னூட்டுவதைப் பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கேட்டுக்கொண்டது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்