Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வீட்டு அறையில் 'ரயில் நகரம்'. 19 வயது ரயில் பிரியரின் கைவண்ணம்

அடுக்குமாடி வீட்டு அறையை ரயில் நகரமாக மாற்றிவிட்டார் நத்தேனியல் டி சூசா.

வாசிப்புநேரம் -

நத்தேனியல் டி சூசா, SMRT ரயில் சேவைத் தூதர்.

ரயில்கள் என்றால் கொள்ளைப் பிரியம் அவருக்கு.

எவ்வளவு பிரியம் என்றால்.... தனது அடுக்குமாடி வீட்டு அறையை ரயில் நகரமாக மாற்றிவிட்டார். அந்தளவுக்கு இரயில்கள்மீது ஆர்வம்.

அவரது அறை, SMRT கருப்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

அதில் மாதிரி மின் ரயில்கள், ரயில் தடங்கள், ரயில் சம்பந்தமான நினைவுப் பொருட்கள் அறையை அலங்கரிக்கின்றன.

அவரது படைப்பபை நேரில் காணச் சென்றார் போக்குவரத்த அமைச்சர் காவ் பூன் வான்.

அவரது தொகுதியான, செம்பவாங்கில் வசிக்கும் நத்தேனியலைச் சந்தித்ததைப் பற்றி தமது Facebook பதிவில் அவர் பகிர்ந்துகொண்டார்.

அந்த அழகிய அறையை உருவாக்க அவருக்கு ஈராண்டுகள் ஆயின.

SMRT ஊழியரான அவர், பிடித்த வேலையை செய்தில் அலாதி மகிழ்ச்சி என்கிறார்.

ஜுரோங் ஈஸ்ட் ரயில் நிலையத்தில் பணிபுரியும் அவர், தமது அறையையும் அதைப் போலவே வடிவமைத்துள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்