Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தண்ணீர்த் தொழில்நுட்பத்தில் புத்தாக்கத்தை அதிகரிக்க புதிய ஒப்பந்தங்கள்

பொதுப் பயனீட்டுக் கழகம் தண்ணீர்த் தொழில்நுட்பங்களில் புத்தாக்கத்தை அதிகரிக்க அனைத்துலகத் தண்ணீர்த் துறை நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. தொழில்நுட்பம், திறன் ஆகியவற்றில் இருதரப்புப் பரிமாற்றங்களை அதிகரிக்கும் நோக்கத்தில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

வாசிப்புநேரம் -
தண்ணீர்த் தொழில்நுட்பத்தில் புத்தாக்கத்தை அதிகரிக்க புதிய ஒப்பந்தங்கள்

படம்: CNA

பொதுப் பயனீட்டுக் கழகம் தண்ணீர்த் தொழில்நுட்பங்களில் புத்தாக்கத்தை அதிகரிக்க அனைத்துலகத் தண்ணீர்த் துறை நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. தொழில்நுட்பம், திறன் ஆகியவற்றில் இருதரப்புப் பரிமாற்றங்களை அதிகரிக்கும் நோக்கத்தில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அனைத்துலகத் தண்ணீர் மையம் என்ற நிலையை எட்டும் சிங்கப்பூரின் கனவை நனவாக்குவதில் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதும் நோக்கம். தண்ணீரிலிருந்து உப்பை அகற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் இணைந்து செயல்படவும் சவுதி அரேபியாவுடன் உப்பு நீர் உருமாற்றுத் திட்டத்தில் எரிசக்திப் பயன்பாட்டைக் குறைக்கவும் ஓர் இணக்கக் குறிப்பு கையெழுத்தானது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் தண்ணீர் விநியோக அமைப்புடன் மேலும் ஓர் இணக்கக் குறிப்பு கையெழுத்திடப்பட்டது. நகர்ப்புற தண்ணீர் விநியோகம், கழிவுநீர் நிர்வாகம் ஆகியவற்றில் அது கவனம் செலுத்தும்.

அனைத்துலகத் தண்ணீர் தொழில்துறையை ஒன்றிணைப்பதில் சிங்கப்பூர் முக்கிய அங்கம் வகிக்க விரும்புவதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறினார்.

நகர்ப்புற தண்ணீர் நிர்வாகத்தில் இருந்துவரும் சவால்களைக் கையாள்வதற்குப் புத்தாக்கத் தீர்வுகளை இணைந்து உருவாக்கவும் ஆற்றல்களை மேம்படுத்தவும் எண்ணம் கொண்டுள்ளதாகத் திரு மசகோஸ் தெரிவித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்