Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பணியைப் பொறுத்து தேசியச் சேவையாளர்களுக்கு உடலுறுதிப் பயிற்சி

தேசியச் சேவையாளர்களுக்குக் கொடுக்கப்படும் பணியைப் பொறுத்து அவர்களுக்கான உடல் உறுதிப் பயிற்சி இப்போது வடிவமைக்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -
பணியைப் பொறுத்து தேசியச் சேவையாளர்களுக்கு உடலுறுதிப் பயிற்சி

படம்: TODAY

தேசியச் சேவையாளர்களுக்குக் கொடுக்கப்படும் பணியைப் பொறுத்து அவர்களுக்கான உடல் உறுதிப் பயிற்சி இப்போது வடிவமைக்கப்படுகிறது.

அவர்களின் போர்த் திறனை மேம்படுத்துவது அதன் நோக்கம்.

Army Half Marathon எனும் இராணுவ நெடுந்தொலை ஓட்டம் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் இன்னும் உடல் உறுதிமிக்க, அதிக ஆற்றல் வாய்ந்த பாதுகாப்புப் படைகளை உருவாக்கும் நோக்கமும் அதில் அடங்கும்.

முன்கூட்டியே ஆயத்தமாக இருப்பது, பாதி வெற்றிக்குச் சமம். பாசிர் லாபா முகாமில் உள்ள இந்தக் காலாட்படை வீரர்களுக்கு, இதயத்தை வலுப்படுத்துவது தொடர்பான பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

ஆனால் "வலுவான வீரர்" எனும் புதிய முயற்சியின் கீழ், குறிப்பிட்ட சில அம்சங்களில் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும். வேறுபட்ட இராணுவ வேலைகளுக்குப் பொருந்துமாறு உடற்பயிற்சித் திட்டங்கள் மறு வடிவமைக்கப்படுகின்றன.

விளையாட்டுத் துறை ஆய்வாளர்கள், வெவ்வேறு விதமான பணிகளை ஆற்றும் இராணுவ வீரர்களின் உடல் அசைவுகளைக் கண்காணித்து, அவர்களுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை உருவாக்குவர்.

எடுத்துக்காட்டாக, காலாட்படையில் உள்ள வீரர்கள் செய்ய வேண்டிய அடிப்படை நடவடிக்கைகளில்  ஒன்று, தரையில் படுத்தவாறு, அக்கம் பக்க அசைவுகளைக் கண்காணித்து, உடனே எழுந்து மிகவேகமாக ஓடுவது.

அதைத் திறமையாக நிறைவேற்ற உதவும் பயிற்சிகளை, வீரர்களின் அன்றாட உடற்பயிற்சியில் இணைத்துள்ளதாகக் கூறினார் விளையாட்டுத் துறை ஆய்வாளர் ஷெரில் லிம். வீரர்களின் மன உறுதியை வலுப்படுத்துவதிலும் பயிற்சி கவனம் செலுத்தும்.

உடலை உறுதியாக வைத்துக் கொள்வதை வீரர்கள் ஒரு பழக்கமாக்கிக் கொள்வதையும் பயிற்சி ஊக்குவிக்கிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்