Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"அதிபர் மாளிகை" அருகே வீடு வேண்டுமா? - விளம்பர வலை விரிக்கும் சொத்து முகவர்கள்

அதிபர் ஹலிமா யாக்கோப் யீஷுன் குடியிருப்புப் பேட்டையில் உள்ள தமது வீட்டிலேயே தொடர்ந்து இருக்கப் போவதாக அறிவித்திருந்தார். 

வாசிப்புநேரம் -
"அதிபர் மாளிகை" அருகே வீடு வேண்டுமா? - விளம்பர வலை விரிக்கும் சொத்து முகவர்கள்

(படம்: TODAY)

அதிபர் ஹலிமா யாக்கோப் யீஷுன் குடியிருப்புப் பேட்டையில் உள்ள தமது வீட்டிலேயே தொடர்ந்து இருக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

அதில் யாருக்கும் மகிழ்ச்சியோ இல்லையோ, சொத்து முகவர்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.

திருவாட்டி ஹலிமா வசிக்கும் புளோக்கில் ஒரு வீடு விற்பனைக்கு வந்துள்ளது. சொத்து முகவர் அதை விளம்பரப்படுத்திய விதம் பலருடைய புருவங்களை உயரச் செய்துள்ளது.

திருவாட்டி ஹலிமாவின் வீட்டிற்கு கீழ் மாடியில் உள்ள ஐந்தரை வீடு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. இணையத்தளங்களில் அது "Yistana"வுக்கு அருகில் உள்ள வீடு என்று விளம்பரம் செய்யப்பட்டது. யீஷுன், அதிபர் மாளிகையான இஸ்தானா இந்த இரண்டு பதங்களைக் கலந்து சூட்டப்பட்ட பெயர் "Yistana".

விற்பனைக்கு வந்துள்ள ஐந்தறை வீட்டின் விலை $460,000. "மிகவும் பாதுகாப்பான" இடம் என்று விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டது.

திருவாட்டி ஹலிமாவின் வீட்டின் அருகே விற்பனையாகும் வீடுகளுக்கு நல்ல வரவேற்பு வந்துள்ளதாக சொத்து முகவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அது மரியாதைக்குறைவான செயல் என்று சிலர் குறைகூறினாலும், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள விரும்புவதாக சொத்து முகவர்கள் கூறுகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்