Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"சிங்கப்பூர் பொருளியல், சமுதாய வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறது"

உலகில் சில முக்கிய நாடுகளின் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்துள்ளது;

வாசிப்புநேரம் -

உலகில் சில முக்கிய நாடுகளின் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்துள்ளது;

இந்த வேளையில் சிங்கப்பூர் பொருளியல், சமுதாய வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்குள் காலடி எடுத்து வைப்பதாகத் துணைப் பிரதமர் திரு. தியோ சீ ஹியென் கூறியுள்ளார். 

நமது சமுதாயம் மூப்படைந்து வருகிறது;

அதே வேளையில் தொழில்நுட்ப வளர்ச்சியால் இதற்கு முன் இல்லாத சுவாரஸ்யமான சில புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியிருப்பதையும், அவர் சுட்டினார்.

வருங்காலத் திறன் வளர்ச்சித் திட்டத்தின் மூலம், சிங்கப்பூரர்களின் திறன்களை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

புத்தாக்கம், வர்த்தகம் ஆகியவை சார்ந்த திறன்களை வளர்ப்பது, முக்கிய நோக்கம்.

முயற்சிகள், இப்போதே நல்ல பலன் அளிக்கத் தொடங்கிவிட்டன.

முழுமையான பலனை அனுபவிக்க, இன்னும் சில காலம் ஆகும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அதனையொட்டி பொதுச் சேவையும் தொடர்ந்து மேம்பட்டு, காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார் திரு. தியோ.

பொதுச் சேவைக்கான விருது நிகழ்ச்சியில், அவர் பேசினார்.

பொதுச் சேவையில் சிறந்து விளங்கிய 300 பேருக்கு, இன்று விருதுகள் வழங்கப்பட்டன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்