Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலையின் வருங்காலத்தை வடிவமைத்து, ஊழியரணியில் பெண்களுக்கு ஆதரவு வழங்குவது முக்கியம்: லிம் சுவீ சே

வேலையின் வருங்காலத்தை வடிவமைத்தல், ஊழியரணியில் பெண்களுக்கு ஆதரவு வழங்குதல்;

வாசிப்புநேரம் -

வேலையின் வருங்காலத்தை வடிவமைத்தல், ஊழியரணியில் பெண்களுக்கு ஆதரவு வழங்குதல்;

இவற்றைச் சிங்கப்பூர் முக்கியமாகக் கருதுவதாய் மனிதவள அமைச்சர் திரு. லிம் சுவீ சே குறிப்பிட்டுள்ளார். 

ஜெர்மனியில் நடைபெற்றுவரும் G20 அமைச்சர்நிலைக் கூட்டத்தில், அவர் அவ்வாறு கூறினார்.

வருங்காலத்தில் வேலையின் தன்மையை முடிவுசெய்வதில் தொழில்நுட்பத்திற்கு முக்கியப் பங்கிருக்கும்.

அதனையொட்டி சூழ்நிலைக்கேற்ப ஊழியர்கள் தங்களை மாற்றியமைத்துக்கொள்வது முக்கியத் திறனாகத் தொடர்ந்து விளங்கும் எனத் திரு. லிம் சுட்டினார். 

அதோடு, புத்தாக்க முயற்சிகள், அனைவரையும் உள்ளடக்கிய ஊழியரணியை உருவாக்க உதவ முடியும் என்றும் முத்தரப்புக் குழுவினர் ஒன்றாகச் செயல்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெண்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கும் நோக்கில், நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைச் செய்துதர முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அதன் தொடர்பில் வேலைப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ள வழிவகுக்கும் வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுவருவதாகத் திரு. லிம் சொன்னார்.

பெண்கள், தொடர்ந்து வேலையில் இருக்க, அவர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது முக்கியம்.

அதற்கு அவர்களுக்கு உதவி வழங்கப்பட்டுவருகிறது.

பாரபட்சமின்றி அவர்களை நடத்த மனிதவள நடைமுறைகள் வலுப்படுத்தப்படுவதாகவும் திரு. லிம் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்