Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மே தினத் தொழிலாளர் தோழர் விருது பெற்ற பெண்மணி

சக ஊழியர்கள் வேலையிடத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைச் சமாளிக்க உதவி வருகிறார், திருமதி மஸ்தான் நாச்சியாள் முகமது.

வாசிப்புநேரம் -

சக ஊழியர்கள் வேலையிடத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைச் சமாளிக்க உதவி வருகிறார், திருமதி மஸ்தான் நாச்சியாள் முகமது.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின், இவ்வாண்டுக்கான மே தினத் தொழிலாளர் தோழர் விருது பெற்றவர்களில், அவரும் ஒருவர்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் சிறந்த மனப்பான்மை கொண்ட அவரைச் சந்தித்து வந்தார், செய்தி நிருபர் யாஸ்மின் பேகம்.

டான் டொக் செங் மருத்துவமனையில், 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார், 54 வயது திருமதி மஸ்தான்.

நோயாளிகளுக்குத் தேவையான சில நிர்வாகச் சேவைகளை நிறைவேற்றுவது இவர் பொறுப்பு. 

நோயாளிகளை கனிவோடு கவனித்துக் கொள்ளும் இவர், கடந்த 10 ஆண்டுகளாகத் தொழிற்சங்கப் பணிகளிலும் கைகொடுத்து வருகிறார். 

அதற்கு என்ன காரணம்?

குடும்பத்தோடு செலவிட வேண்டிய நேரத்தில் பெரும்பகுதியையும், தொழிற்சங்கப் பணிகளுக்கு ஒதுக்குகிறார் திருமதி மஸ்தான். 

பிரச்சினைகளுக்கு எவ்வாறு ஆலோசனை வழங்குவது எனப் பயிற்சி பெற்றுள்ள இவர், தொடர்ந்து உதவி செய்ய உந்துதலாக இருப்பது ஒரு சம்பவம். 

இவரைப் போல் பலருக்கு ஏற்படும் குழப்பங்களைத் தெளிவுபடுத்தும்போது மிகுந்த மன நிறைவு கிடைப்பதாகக் கூறுகிறார் திருமதி மஸ்தான்.

இவரின் அடுத்த முயற்சி என்ன?

தம்மைப் போல் சேவையாற்ற மேலும் சிலர் முன்வந்தால், இன்னும் அதிகமானோர் விழிப்புணர்வு பெற்று உதவிபெற முடியும் என்கிறார் திருமதி மஸ்தான். 

தமக்குக் கிடைத்த விருது, அதற்கு ஓர் ஊக்கமாக இருக்குமென்பது இவரின் நம்பிக்கை.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்