Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'சிங்கப்பூரின் அக்கால சேரிப் பகுதிகளில் சிலவற்றைப் பாதுகாத்திருக்கலாம்'

சிங்கப்பூரின் முன்னோடி நகர வடிவமைப்பாளர் டாக்டர் லியூ தாய் கர் தமது பதவிக்காலத்தின்போது சிங்கப்பூரின் அக்கால சேரிப் பகுதிகளில் சிலவற்றையாவது பாதுகாத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் முன்னோடி நகர வடிவமைப்பாளர் டாக்டர் லியூ தாய் கர் தமது பதவிக்காலத்தின்போது சிங்கப்பூரின் அக்கால சேரிப் பகுதிகளில் சிலவற்றையாவது பாதுகாத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யாததை எண்ணி இன்றும் வருந்துவதாக அவர் கூறினார். 

சிங்கப்பூரின் வளர்ச்சி எப்படிப்பட்டது என்பதை வருங்காலத் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்ட, அந்தச் சேரிகள் பயனுள்ளவையாக இருந்திருக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். 

சீனாவின் சூச்சோவ் நகரில் நடைபெற்ற எட்டாவது உலக நகர மேயர்கள் மாநாட்டில், டாக்டர் லியூ உரையாற்றினார். 

அப்போது, நகர வடிவமைப்புப் பற்றிய தமது எண்ணங்களை அவர் பகிர்ந்துகொண்டார். 

நகர வடிவமைப்பில் முக்கிய இடம்பெறும் முக்கியமான முதல் அம்சம், இயற்கையான சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் திட்டங்களை வரைவது என்றார் டாக்டர் லியூ. 

ஒவ்வொரு நகரத்தின் இயற்கையான சுற்றுச்சூழலும் தனித்துவமானது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இரண்டாவது, வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்களைப் பாதுகாப்பது.

நகரங்கள் கடந்து வந்த பாதையை மக்கள் அறிந்துகொள்ள அது உதவும் என்றார் டாக்டர் லியூ.

நகரங்களின் தனித்துவமான அடையாளங்களை மேம்படுத்துவது குறித்தும் கருந்தரங்கில் அலசப்பட்டது. 

கருத்தரங்கின் முடிவில் நகரப்புறங்களைத் துடிப்பான வழிகளில் நிர்வகிப்பது பற்றியும் நீண்ட கால ஒருங்கிணைந்த பெருந்திட்டம் பற்றியும் தலைவர்கள் ஆலோசித்தனர்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்