Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பண்ணைப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 100 ஹெக்டேருக்கு மேற்பட்ட அளவுள்ள நிலப்பகுதி

லிம் சூ காங், சுங்கை தெங்கா வட்டாரங்களில் அமைந்துள்ள 100 ஹெக்டேருக்கு மேற்பட்ட அளவுள்ள நிலப்பகுதி, முதல் முறையாக பூங்காத் தொழில்துறைப் பண்ணைப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
பண்ணைப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 100 ஹெக்டேருக்கு மேற்பட்ட அளவுள்ள நிலப்பகுதி

படம்: Afifah Ariffin

லிம் சூ காங், சுங்கை தெங்கா வட்டாரங்களில் அமைந்துள்ள 100 ஹெக்டேருக்கு மேற்பட்ட அளவுள்ள நிலப்பகுதி, முதல் முறையாக பூங்காத் தொழில்துறைப் பண்ணைப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசியப் பூங்காக் கழகம் அதனை அறிவித்தது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நான்கு கட்டங்களாகக் கிட்டத்தட்ட 15 நிலப் பகுதிகள், குத்தகைக்கு விடப்படும் என்று கழகம் தெரிவித்தது.

இரண்டு முறைகளில் நிலங்கள் குத்தகைக்கு விடப்படும். முதல் முறையில் ஒன்பது ஆண்டுகளுக்கு நிலங்கள் குத்தகைக்கு விடப்படும்.

அதன்படி, மூவாண்டுக்கு ஒரு முறை குத்தகையைப் புதுப்பிக்க வேண்டும். இரண்டாவது முறை பெரிய நிலப்பரப்பு கொண்ட நிலங்களுக்கான குத்தகை. அது 10 ஆண்டுகள் குத்தகை வகையைச் சார்ந்தது.

வடிகால் அமைப்புகள், மின் இணைப்புகள் போன்ற அடிப்படை வசதிகளுடன் நிலப்பகுதி, பண்ணைகளுக்குக் குத்தகைக்கு விடப்படும். 

சிங்கப்பூர், தொடர்ந்து ஒரு பூங்கா நகரமாக விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், புதிய திட்டம் அறிமுகமாகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்