Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாலர்பள்ளி, குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள்-அதிகரிக்கும் கட்டணங்கள்

சிங்கப்பூரில் பாலர்பள்ளி, குழந்தைப் பராமரிப்பு நிலையம் ஆகியவற்றில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான கட்டணம் உயர்ந்து வருகிறது.

வாசிப்புநேரம் -
பாலர்பள்ளி, குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள்-அதிகரிக்கும் கட்டணங்கள்

படம்: Channel NewsAsia

சிங்கப்பூரில் பாலர்பள்ளி, குழந்தைப் பராமரிப்பு நிலையம் ஆகியவற்றில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான கட்டணம் உயர்ந்து வருகிறது.

2013ஆம் ஆண்டு முதல், அதற்கான கட்டணம் 4% உயர்வைக் கண்டுள்ளது. ஆனால், மானியங்கள், கழிவுகள் போன்றவை பாலர்பள்ளிக் கட்டணம், தொடர்ந்து கட்டுப்படியான ஒன்றாக நீடிக்க உதவுகின்றன.  பாலர்பள்ளிகளின் தரத்தில் குறைவு ஏதும் இல்லாததும் உறுதி செய்யப்படுகிறது.

குழந்தைகளைத் தற்போது Gracefields பாலர்பள்ளியில் சேர்த்திருக்கும் பெற்றோர் மாதாந்தரக் கட்டணமாக $550 செலுத்துகின்றனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் அது $100 அதிகம்.

தனியார்துறை பாலர்பள்ளியான அது அதிகச் செலவுமிக்க பகுதிக்கு இடம் மாறியதால் கட்டணத்தை உயர்த்தியது. இருப்பினும் இதற்குமேல் கட்டணத்தை உயர்த்த அது இப்போதைக்குத் திட்டமிடவில்லை.

வசதி குறைந்த பெற்றோரின் குடும்பச் சூழலைப் பரிசீலித்து Gracefields பாலர்பள்ளிக் கட்டணத்தில் கழிவு வழங்குகிறது. அரசாங்கம், தனியார் பாலர் பள்ளிகளுக்கு மானியம் வழங்குவதில்லை.

ஆகவே, கட்டணத்தை தொடர்ந்து குறைவாக வைத்திருப்பது கடினம் என்கிறார் Gracefields பாலர்பள்ளி முதல்வர் திருமதி ஜாய்ஸ் தியோ. பள்ளி வாடகை, ஆசிரியர் சம்பளம் போன்ற பெரிய செலவுகள் இருப்பதை அவர் சுட்டினார்.

குழந்தைப் பராமரிப்புக்கான கட்டணமும் உயர்ந்து வருகிறது. குழந்தைப் பாராமரிப்பு நிலையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுக்கும், கூடுதல் வகுப்புகளுக்கும் பொதுவாகப் பெற்றோர் கூடுதலாகச் செலவிட வேண்டியிருக்கும்.

முழுநாள் குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கான கட்டணம் கிட்டத்தட்ட $870. 2013இல் அது $830யாக இருந்தது. அரசாங்கத்தின் மானிய உதவியோடு இயங்கும் பாலர்பள்ளிகள், பங்களித்துவ அமைப்புகள் நடத்தும் பாலர்பள்ளிகள் ஆகியவை சிறப்புத் திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன.

அதன்மூலம், வசதி குறைந்த குடும்பங்கள் $5க்கும் குறைவான கட்டணத்தைச் செலுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணத்தில் தரமான சேவையை வழங்க சில பாலர்பள்ளிகள் முயன்று வருவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மெக்ஃபர்சன் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங், குழந்தைகள் தரமான சேவைகளைப் பெறுகிறார்கள் என்று பெற்றோருக்கு உறுதியளிப்பதில் பாலர்பள்ளிகள் தொடர்ந்து ஈடுபாடு காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்