Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மலேசியப் பிள்ளைகளில் 70% அச்சுறுத்தலுக்கு ஆளாவதை எண்ணி அஞ்சுகின்றனர்

மலேசியாவில் சுமார் 70 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பிள்ளைகள் அச்சுறுத்தலுக்கு ஆளாவதை எண்ணிக் கவலைப்படுவதாக, UNICEF எனப்படும் ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் கல்வி நிதியம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

மலேசியாவில் சுமார் 70 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பிள்ளைகள் அச்சுறுத்தலுக்கு ஆளாவதை எண்ணிக் கவலைப்படுவதாக, UNICEF எனப்படும் ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் கல்வி நிதியம் தெரிவித்துள்ளது.
ஒப்புநோக்க ஜப்பானில் அந்த விகிதம் 30 விழுக்காடு,  இங்கிலாந்தில் 40 விழுக்காடு.

நிதியம் நடத்திய உலகளாவிய கருத்தாய்வின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மலேசியாவில் உள்ள பிள்ளைகள் பயங்கரவாதம், பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைப் பற்றியும் கவலைப்படுவதாகக் கருத்தாய்வு காட்டியது.

உலகக் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
14 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிள்ளைகள் ஆய்வில் கலந்துகொண்டனர். 

உலகத் தலைவர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டிய பிரச்சினைகளாக மூன்று அம்சங்களைப் பிள்ளைகள் பட்டியலிட்டுள்ளனர்.
ஏழைகளுக்கான கல்வி, வறுமை ஒழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு-ஆகியைவைதான் அந்த மூன்று அம்சங்கள்.

அரசாங்கம், தொழிலாளர்கள், சமூகங்கள் ஆகிய முத்தரப்பும், பிள்ளைகள் அனுபவிக்கும் துன்பங்களைச் செவிமடுத்துத் தீர்வுகாண வலியுறுத்தியது நிதியம்.

பிள்ளைகளின் கருத்தைக் கேட்டறிந்து அதற்கு ஏற்ற கொள்கைகளை வகுக்குமாறும் நிதியம் அனைத்துலக நாடுகளை வற்புறுத்தியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்