Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆழ்சுரங்க வடிகால் முறை: இரண்டாம் தொகுதியில் புத்தாக்க அம்சங்கள்

ஆழ்சுரங்க வடிகால் முறையின் இரண்டாம் தொகுதியில், புத்தாக்க அம்சங்கள் சேர்க்கப்படும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

ஆழ்சுரங்க வடிகால் முறையின் இரண்டாம் தொகுதியில், புத்தாக்க அம்சங்கள் சேர்க்கப்படும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. அந்த உள்ளமைப்பு நூறு ஆண்டுகளுக்குச் செயல்பட அந்த அம்சங்கள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை நடைபெற்ற அதற்கான நிலந்திருத்தும் நிகழ்ச்சியில் பொதுப் பயனீட்டுக் கழகம் அது குறித்த விவரங்களை வெளியிட்டது. கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக, நுண்ணிழைக் கம்பிவடங்களைப் பொருத்துவது, புத்தாக்க அம்சங்களில் அடங்கும்.

ஆழ்சுரங்க வடிகால் முறையின் இரண்டாம் தொகுதியில், 40 கிலோமீட்டர் நீளத்துக்கு, ஆழமான சுரங்க வடிகால்களையும், 60 கிலோமீட்டர் நீளத்துக்கு இணைப்பு வடிகால்களையும் உருவாக்குவது இலங்கு.

2025-ஆம் ஆண்டில் அந்தத் திட்டம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நூறு கிலோமீட்டர் நீளச் சுரங்க வடிகால் கட்டமைப்பு சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் அமையும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்