Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கட்டடச் சூழலில் பணிபுரிவோருக்கான புதிய திட்டங்கள்

கட்டடச் சூழலில் பணிபுரியும் இளம் தலைவர்களுக்கான கட்டமைப்பையும் ஆணையம் அமைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
கட்டடச் சூழலில் பணிபுரிவோருக்கான புதிய திட்டங்கள்

(படம் : சேனல் நியுஸ்ஏசியா)

கட்டடத் துறையில் சிங்கப்பூரர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் ஆற்றல்களை மேம்படுத்தவும் கட்டட, கட்டுமான ஆணையம் இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கான விரிவான பாடத் திட்டங்களை உருவாக்க தொழில்துறை, உயர்கல்வி நிலையங்களுடன் இணைந்து செயல்பட ஆணையம் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

"BEST" என்று அழைக்கப்படும் அந்தப் பணிக்குழு தொடர்கல்வியிலும் பயிற்சிக் கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்தும்.

கட்டடச் சூழலில் பணிபுரியும் இளம் தலைவர்களுக்கான கட்டமைப்பையும் ஆணையம் அமைத்துள்ளது.

இளம் தலைவர்கள் அனுபவங்களையும் ஆற்றல்களையும் பகிர்ந்துகொள்ளும் தளமாக அது அமையும்.

தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சர் டெஸ்மண்ட் லீ கட்டட, கட்டுமான ஆணையத்தின் கல்வி உபகாரச் சம்பளம் வழங்கும் நிகழ்ச்சியில் புதிய திட்டங்கள் குறித்து அறிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்