Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆசியாவில் சிறந்த கல்வி முறையைக் கொண்ட சிங்கப்பூர்

எல்லா அம்சங்களையும் கவனத்தில் கொண்டால் 100க்கு 80.1 புள்ளிகளுடன் சிங்கப்பூர் ஐந்தாம் நிலையைப் பிடித்துள்ளது.  

வாசிப்புநேரம் -
ஆசியாவில் சிறந்த கல்வி முறையைக் கொண்ட சிங்கப்பூர்

(படம்: டெக் கீ தொடக்க நிலைப் பள்ளி)

மாணவர்களை வருங்காலத்துக்குத் தயார்படுத்துவதில் சிங்கப்பூர் கல்வி முறை ஆசியாவிலேயே சிறந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனைத் தளமாகக் கொண்ட பொருளியல் வல்லுநர்கள் குழு வெளியிட்டுள்ள தரப்பட்டியலில் சிங்கப்பூர் அந்த நிலையைப் பிடித்துள்ளது.
எல்லா அம்சங்களையும் கவனத்தில் கொண்டால் 100க்கு 80.1 புள்ளிகளுடன் சிங்கப்பூர் ஐந்தாம் நிலையைப் பிடித்துள்ளது.

நியூசிலந்து, கனடா, ஃபின்லந்து, சுவிட்சர்லந்து ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.

(படம்: EIU)

15 முதல் 24 வயது வரையுள்ளோருக்கு அரசாங்கம் வழங்கும் கல்வித் தரத்தின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டன.

ஆசிய வட்டாரத்தில் ஜப்பான் 77.2 புள்ளிகளுடன் ஏழாம் நிலையைப் பிடித்துள்ளது.

12 ஆவது இடத்தில் தென்கொரியா.

14 ஆம் நிலையில் ஹாங்காங்.

சீனாவுக்கு 31 ஆம் இடம்.

(படம்: EIU)

வேகமாக மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுக்க மாணவர்கள் தயாராக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாற்றம், நகரமயமாதல், புலம் பெயர்தல், மக்கள்தொகையில் மாற்றம் ஆகிய சவால்களை எதிர்கொள்ளவும் மாணவர்கள் ஆயத்தமாக வேண்டும்.

சிங்கப்பூர் கல்வியில் சிறந்து விளங்க தரமான ஆசியர்கள் குழு இங்கிருப்பதும் முக்கியக் காரணம்.

கல்வித் தரத்தை மேலும் சிறப்பாக்க வகுப்பறைகளுக்கு அப்பாலும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு ஏதுவாக வர்த்தக நிறுவனங்கள், பல்கலைக்கழங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றலாம் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்