Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பயிற்சியின் போது மாண்ட தேசிய சேவையாளருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு

கடந்த வாரம் கரடுமுரடான நிலப் பகுதியில் Bionix காலாட்படை போர் வாகனத்தை சான் வழிநடத்திக் கொண்டிருந்த போது அது பக்கவாட்டில் கவிழ்ந்தது. 

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்தில் இராணுவப் பயிற்சியின் போது நிகழ்ந்த விபத்தில் மாண்ட மூன்றாம் சார்ஜன்ட் சான் ஹியாங் செங் கேவினின் நல்லுடல் நேற்று சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டது.

சிங்கப்பூர் ஆயுதப் படை விமானத்தில் மாலை சுமார் 6 மணிக்கு அது சிங்கப்பூர் வந்து சேர்ந்தது.

அவரது பெற்றோர் உடன் வந்தனர்.

வரும் சனிக்கிழமை இராணுவ மரியாதையுடன் அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெறும்.

தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் சானின் குடும்பத்தாருக்குத் தொடர்ந்து உதவியும் ஆதரவும் வழங்கி வருகின்றன.

கடந்த வாரம் கரடுமுரடான நிலப் பகுதியில் Bionix காலாட்படை போர் வாகனத்தை சான் வழிநடத்திக் கொண்டிருந்த போது அது பக்கவாட்டில் கவிழ்ந்தது.

விபத்து நடந்த ஷோல்வாட்டர் பயிற்சி இடத்தில் அனைத்து சிங்கப்பூர் ஆயுதப் படைப் பிரிவுகளின் பயிற்சிகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் சீராக இருப்பது உறுதிசெய்யப்பட்ட பிறகே பயிற்சிகள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்