Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உடற்குறையுள்ள சிங்கப்பூர் மாணவர்களுக்குக் கூடுதல் உதவித் தொகை

கடுமையான உடற்குறை அல்லது, உணர்வில் குறைபாடு கொண்ட, பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் முழுநேர மாணவராகப் பதிவுசெய்திருக்கும் சிங்கப்பூரர்களுக்கு அது பொருந்தும்.

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ள சிங்கப்பூர் மாணவர்களுக்குக் கூடுதல் உதவித் தொகை

(படம் :Today)

உடற்குறையுள்ள மாணவர்களின் கல்விக்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளுக்கும், ஆதரவுச் சேவைகளுக்குமான கட்டணக் கழிவின் உச்ச-வரம்பு, 70,000 வெள்ளிக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் ஓங் யி காங் அதனை அறிவித்தார்.

கடுமையான உடற்குறை அல்லது, உணர்வில் குறைபாடு கொண்ட,
பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் முழுநேர மாணவராகப் பதிவுசெய்திருக்கும் சிங்கப்பூரர்களுக்கு அது பொருந்தும்.

கல்வி அமைச்சின் சிறப்புத் தேவையுடையோருக்கான கல்வி நிதியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய பிரிவின் கீழ் அந்தக் கட்டணக் கழிவுக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னர் குறைபாடுள்ள மாணவர்களுக்கான உதவித் தொகை அதிகபட்சம் $25,000.

சிறப்புக் கல்வித் தேவைகளுடைய சுமார் 75% மாணவர்கள் வழக்கமான பள்ளிகளில் பிற மாணவர்களுடன் படிப்பதாகத் திரு ஒங் குறிப்பிட்டார். அவர்களுக்குச் சிறந்த ஆதரவு அளிப்பதில் தமது அமைச்சு கடப்பாடு கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்