Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

திருக்கை மீன்களை நீர்த்தேக்கத்தில் கைவிட்ட ஆடவர்

தகுந்த காரணம் இன்றி கோட்டோரோ வகை திருக்கை மீன்கள் கைவிடப்பட்டதாக ஆணையம் சொன்னது.

வாசிப்புநேரம் -
திருக்கை மீன்களை நீர்த்தேக்கத்தில் கைவிட்ட ஆடவர்

(படம்:Scales and Fins/ Facebook)

லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் மூன்று திருக்கை மீன்களை விட்டுச் சென்றதாக 48 வயது ஆடவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
செல்லப் பிராணிகளாக அந்த மூன்று திருக்கை மீன்களையும் கேரி டான் சின் குவான் வளர்த்துள்ளார்.
ஜூன் மாதம் 2ஆம் தேதி பகல் நேரத்தில் அவற்றை நீர்த்தேக்கத்தில் அவர் விடுவித்தார் எனக் குற்றச்சாட்டு பதிவானது.

(படம்: சேனல்நியூஸ்ஏசியா)

தகுந்த காரணம் இன்றி கோட்டோரோ வகை திருக்கை மீன்கள் கைவிடப்பட்டதாக ஆணையம் சொன்னது.
திருக்கை மீன்கள் சம்பந்தப்பட்ட முதல் வழக்கு இது என வழக்குரைஞர் கூறினார்.
அந்தச் சம்பவத்தின் தொடர்பில் பொதுப் பயனீட்டுக் கழகமும் வழக்குத் தொடுக்கலாம் என்றும் கூறப்பட்டது.
வழக்கு மீண்டும் 26ஆம் தேதி விசாரணைக்கு வரும்.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்