Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மெக்டானல்ஸ் காப்பியில் மிதந்து கொண்டிருந்த கரப்பான் பூச்சியின் கால்கள்

வாடிக்கையாளர் ஒருவரின் காப்பியில் கரப்பான் பூச்சியின் கால்கள் இருந்ததைத் தொடர்ந்து மெக்டானல்ட்ஸ்  (McDonald's) நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

பேங்காக், தாய்லந்து: வாடிக்கையாளர் ஒருவரின் காப்பியில் கரப்பான் பூச்சியின் கால்கள் இருந்ததைத் தொடர்ந்து மெக்டானல்ட்ஸ் (McDonald's) நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று காப்பி வாங்கினார் Facebook பயனீட்டாளர் நொஸ்டெல்ஜிக் எய்க் (Nostalgic Eik). அதில் கரப்பான் பூச்சியின் கால்கள் இருப்பதை உணர்ந்த அவர், ஊழியர் ஒருவரிடம் காப்பியை மாற்றிக்கொடுக்குமாறு கேட்டார்.

மாற்றித் தரப்பட்ட காப்பியிலும் கரப்பான் பூச்சியின் கால்கள் இருப்பதைக் கண்டார் ஆடவர். சினமடைந்த அவர் தனது வருத்தத்தை மெக்டானல்ட்ஸின் Facebook பக்கத்தில் பதிவுசெய்தார்.

பதிவு இணையத்தில் பரவியது. 1,700க்கும் மேற்பட்டோர் பதிவைத் தங்கள் Facebook பக்கங்களிலும் பகிர்ந்துகொண்டனர்.

மெக்டானல்ட்ஸ், சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அதன் ஊழியர்கள் உணவு பாதுகாப்பு தரநிலைகளைக் கடைபிடிப்பர் என்றும் அது உத்தரவாதம் கொடுத்துள்ளது.

காப்பி தயாரிக்கப்பட்ட இயந்திரம் பரிசோதிக்கபடுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்