Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செந்தோசா பாலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மீன்பிடிக்க நுழைந்த ஐவர்

செந்தோசா பாலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் நுழைந்ததற்காக ஐந்து ஆடவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

வாசிப்புநேரம் -

செந்தோசா பாலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் நுழைந்ததற்காக ஐந்து ஆடவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 18, 20 ஆகிய இரண்டு தேதிகளில் நடந்த தனித்தனிச் சம்பவங்களையொட்டி அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

அத்துமீறி மீன் பிடிக்கக்கூடாது என்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் சந்தேக நபர்கள் நுழைவது கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்தது.

முதலில் இருவர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் நுழைந்ததற்காக செந்தோசா அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டனர்.

இரு நாட்களுக்குப் பின்னர் மற்ற மூவர் அதே இடத்தினுள் நுழைய முயன்றதற்காக தடுத்துவைக்கப்பட்டனர் என்று காவல் துறை தெரிவித்தது.

விசாரணை தொடர்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக $1,000 அபராதம் விதிக்கப்படலாம்

கட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்