Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உலகத் திறன் போட்டிகளில் சிங்கப்பூர்க் குழுவிற்கு 13 பதக்கங்கள்

அபுதாபியில், உலகத் திறன் போட்டிகளில் சிங்கப்பூர்க் குழு 2 தங்கப் பதக்கங்களையும், 3 வெண்கலப் பதக்கங்களையும், உன்னதப் பங்களிப்புக்கான 8 பதக்கங்களையும் வென்றுள்ளது.

வாசிப்புநேரம் -
உலகத் திறன் போட்டிகளில் சிங்கப்பூர்க் குழுவிற்கு 13 பதக்கங்கள்

(படம்: Channel NewsAsia)

அபுதாபியில், உலகத் திறன் போட்டிகளில் சிங்கப்பூர்க் குழு 2 தங்கப் பதக்கங்களையும், 3 வெண்கலப் பதக்கங்களையும், உன்னதப் பங்களிப்புக்கான 8 பதக்கங்களையும் வென்றுள்ளது.

ஈராண்டுக்கு ஒரு முறை நடக்கும் அந்தப் போட்டிகளில் இம்முறை புதிதாகச் சேர்க்கப்பட்ட பிரிவுகள் இரண்டிலும் சிங்கப்பூர்க் குழு தங்கத்தைக் கைப்பற்றியது.

சரக்குப் போக்குவரத்து, முப்பரிமாண மின்னிலக்க விளையாட்டுக் கலை ஆகியவை அந்தப் பிரிவுகள்.

உலகத் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற இளம் சிங்கப்பூரர்கள் ஓராண்டுக்கும் மேல் கடினப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் எங் ஜுன் சுவென் (Ng Jun Xuan) முப்பரிமாண மின்னிலக்க விளையாட்டுக் கலைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

தகவல் கம்பிவடக் கட்டமைப்புப் பிரிவில் ஆண்ட்ரூ டான் (Andrew Tan) வெண்கலப் பதக்கம் வென்றார்.

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஃபாஸிரா ஸூல்கிஃப்லியும் (Fazira Zulkifli), லி காங்லியும் (Li Kangli) வெண்கலப் பதக்கம் வென்ற மற்ற இருவர்.

21 பேர் கொண்ட சிங்கப்பூர்க் குழு, அழகுக் கலை சிகிச்சை, சமையற்கலை, மின்னியல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் உன்னதப் பங்களிப்புக்கான பதக்கங்களை வென்றனர்.

போட்டிகளின் அதிகபட்சப் புள்ளிகளான 800க்கு, குறைந்தது 700 புள்ளிகளைப் பெற்றிருந்தும், பதக்கம் வெல்லாத போட்டியாளர்களுக்குச் உன்னதப் பங்களிப்புப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

சிங்கப்பூர்க் குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கக் கல்வி அமைச்சர் ஓங் யீ காங் அபுதாபி சென்றிருந்தார்.

இவ்வாண்டுப் போட்டியில், சீனா 30 பத்தக்கங்களை வென்று ஆகப் பெரிய வெற்றியாளர் என்ற பெருமையைப் பெற்றது.

60 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1300 போட்டியாளர்கள் இவ்வாண்டு நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் கலந்துகொண்டனர்.       

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்