Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிடோக் ரெசர்வோர் பகுதியில் இரட்டைக் கொலை

புளோக் 717 பிடோக் ரெசர்வோர் ரோட்டில் இரட்டைக் கொலைச் சம்பவம்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: புளோக் 717 பிடோக் ரெசர்வோர் ரோட்டில் இரட்டைக் கொலைச் சம்பவம்.

உதவிக்கான அழைப்பு பிற்பகல் கிட்டதட்ட 3.30 மணிக்கு வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

79 வயது ஆடவரும் 78 வயது மூதாட்டியும் அடுக்குமாடி வீட்டில் மாண்டு கிடக்கக் காணப்பட்டனர். அவர்கள் இருவரும் தம்பதியர் என்றும் அவர்கள் சில நபர்களுடன் அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் டுடே நாளிதழ் அறிந்தது.

பிற்பகல் சுமார் 4 மணிக்கு அவர்கள் மாண்டதாக மருத்துவ உதவியாளர்கள் உறுதி செய்தனர்.

சம்பவத்தைக் கொலை எனக் காவல்துறையினர் வகைப்படுத்தியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்