Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"ரென்மின்பி" நாணயத்தின் மூலம் சீனாவுக்கு சிங்கப்பூர் ஆதரவு

சீனாவின் "ரென்மின்பி" நாணயத்தை வட்டார உள்ளமைப்பு திட்டங்களுக்குப் பயன்படுத்துவதன் மூலம், "ஒரே இணைப்பு, ஒரே பாதை" திட்டத்தில் சீனாவுக்கு சிங்கப்பூர் ஆதரவு தெரிவித்துவருகிறது.

வாசிப்புநேரம் -
"ரென்மின்பி" நாணயத்தின் மூலம் சீனாவுக்கு சிங்கப்பூர் ஆதரவு

(படம்: MCI)

சீனாவின் "ரென்மின்பி" நாணயத்தை வட்டார உள்ளமைப்பு திட்டங்களுக்குப் பயன்படுத்துவதன் மூலம், "ஒரே இணைப்பு, ஒரே பாதை" திட்டத்தில் சீனாவுக்கு சிங்கப்பூர் ஆதரவு தெரிவித்துவருகிறது.

முதலீட்டுச் சந்தை தொடர்புகளை மேம்படுத்துவது, இரு நாட்டுகளும் அவற்றுக்கு இடையிலான நிதி உறவுகளை வலுப்படுத்த கைகொடுக்கும் என்று சிங்கப்பூர் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியெட் கூறினார்.

சீனாவின் ஸியாமன் நகரில், OCBC வங்கியின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவில் அவர் உரையாற்றினார்.

பிரதமர் லீ சியென் லூங்கின் சீனப் பயணத்தின் பேராளர் குழுவில் இடம்பெற்றவர்களில், நிதி அமைச்சர் ஹெங்கும் ஒருவர்.

"ஒரே இணைப்பு, ஒரே பாதை" திட்டத்தின் பாதையில் அமைந்திருக்கும் நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, நிதி துறை தொடர்பான பயிற்சிகளை வழங்க, சிங்கப்பூரும் சீனாவும் கூட்டாகப் பணியாற்றவிருப்பதாகத் திரு ஹெங் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்