Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜப்பானின் கிழக்குக் கரையோரத்தில் நிலநடுக்கம்

ஜப்பானின் கிழக்குக் கரையோரம் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

ஜப்பானின் கிழக்குக் கரையோரம் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

ஹோன்ஷு தீவிலுள்ள காமாய்ஷி நகருக்குச் சுமார் 280 கிலோமீட்டர் கிழக்கே, 10 கிலோமீட்டர் ஆழத்தில் அது மையங்கொண்டிருந்தது.

அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் அந்தத் தகவலை வெளியிட்டது.

நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்று ஜப்பானிய வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

சேதம் குறித்த உடனடித் தகவல் ஏதுமில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்