Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஹோட்டலுக்குக் கீழ் ஒரு குட்டி நகரம்

சிங்கப்பூரின் மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டல் சிங்கப்பூரின் முக்கிய சின்னங்களில் ஒன்று. சிங்கப்பூரின் ஆகப் பெரிய ஹோட்டலான அதில் 9,500 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

வாசிப்புநேரம் -
ஹோட்டலுக்குக் கீழ் ஒரு குட்டி நகரம்

(படங்கள்: Channel NewsAsia)

சிங்கப்பூரின் மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டல் சிங்கப்பூரின் முக்கிய சின்னங்களில் ஒன்று. சிங்கப்பூரின் ஆகப் பெரிய ஹோட்டலான அதில் 9,500 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

ஹோட்டலின் அடித்தளத்தில் ஒரு சிறிய நகரமே உள்ளது எனலாம்.

24 மணிநேரமும் ஊழியர்களின் தேவைகளுக்கு ஏற்ப வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த "குட்டி நகரம்" எப்படி இயங்குகிறது என்று காணும் அரிய வாய்ப்பு பொதுமக்களுக்கு இன்று கிடைத்தது.

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் ஏற்பட்டில் Open Hotels திட்டத்தின் கீழ் மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டலின் அடித்தளம் இன்று பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

திட்டத்தில் பங்கெடுக்கும் 23 ஹோட்டல்களில் மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டலும் ஒன்று.

ஹோட்டல் துறை எப்படி இயங்குகிறது என்பதைக் காட்டுவது திட்டத்தின் நோக்கம்.

அந்தச் சுற்றுலாவிலிருந்து சில காட்சிகள் இதோ :

ஊழியர் உணவருந்தும் இடங்களில், சில பிரபலங்கள் வருகை தருவதும் உண்டு.

ஒரு நாளைக்கு 12,000 சீருடைகளைச் சலவை செய்கிறது இந்தக்
"குட்டி நகரம்".

30 விநாடிகளில் ஊழியர்கள் தங்கள் சீருடைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

600 வகையான சீருடைகளைக் கொண்ட ஹோட்டலில் இது ஒரு பெரிய சாதனை.

ஊழியர்கள் குளிக்கவும் இளைப்பாறவும் வசதிகள் உண்டு.

சமையல் வகுப்புகள், உடற்பயிற்சி வகுப்புகள் திரைப்படங்கள் பார்க்கும் வசதிகளும் இங்கு உள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்