Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குறிப்பிட்ட தடுப்பூசிகளுக்கான கட்டணம் - அடுத்த மாதம் முதல் மெடிசேவைப் பயன்படுத்தலாம்

தடுப்பூசிகளில் சிலவற்றைப் போட்டுக் கொள்ள, அடுத்த மாதம் முதல் மெடிசேவ் கணக்கைப் பயன்படுத்தலாம்.

வாசிப்புநேரம் -
குறிப்பிட்ட தடுப்பூசிகளுக்கான கட்டணம் - அடுத்த மாதம் முதல் மெடிசேவைப் பயன்படுத்தலாம்

(படம்: AFP)

தடுப்பூசிகளில் சிலவற்றைப் போட்டுக் கொள்ள, அடுத்த மாதம் முதல் மெடிசேவ் கணக்கைப் பயன்படுத்தலாம்.

சுகாதார அமைச்சு இன்று அந்தத் தகவலைத் தெரிவித்தது.

பொதுமக்களிடையே தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதுபற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது அதன் நோக்கம்.

18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசியால் தவிர்க்கப்படும் நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெற என்னென்ன செய்யவேண்டும் என்ற ஆலோசனை வழங்கப்படும்.

இதற்கு முன் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் அல்லது தவிர்க்கக் கூடிய நோய்கள் வரும் அபாயத்தில் இருப்போர், தடுப்பூசிகளைப் பற்றி சரியான முடிவுகள் எடுக்கப் புதிய திட்டம் வகைசெய்யும் என நம்பப்படுகிறது.

சளிக்காய்ச்சல், தொண்டை அழற்சி நோய் போன்ற 11 வகையான நோய்களிலிருந்து பாதுகாக்கும் 7 தடுப்பூசிகள் திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன.

தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வோர் தங்கள் மெடிசேவ் கணக்கிலிருந்து $400 வரை மீட்டுக்கொள்ள முடியும்.

குழந்தைப் பருவத் தடுப்பூசித் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.

ஆனால், பெரியவர்களுக்கான தடுப்பூசித் திட்டம் பற்றிப் போதிய விழிப்புணர்வு இல்லை.

சமூகத்தில் நிலவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் ஓர் உத்தியாக இந்தத் திட்டம் இருக்கும் என்று சுகாதாரத் துணையமைச்சர் லாம் பின் மின் தெரிவித்தார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்