Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"சிங்கப்பூரில் வேறுபாடுகளுக்கிடையில் நல்லிணக்கம் காண்பது நம் பெருமைமிகு சாதனைகளில் ஒன்று"

இன நல்லிணக்கம் என்பது இசையமைப்பதைப் போன்றது.

வாசிப்புநேரம் -

இன நல்லிணக்கம் என்பது இசையமைப்பதைப் போன்றது.

அதில் ஈடுபடுவோர் பல்வேறு பின்னணிகளைக் கொண்டிருந்தாலும்
இணைந்து செயலாற்ற வேண்டியது முக்கியம்.

வாழ்நாள் முழுதும் பின்பற்ற வேண்டிய ஒன்று. அவ்வப்போது மேம்படுத்தப்பட வேண்டியது என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் வேறுபாடுகளுக்கிடையில் நல்லிணக்கம் காண்பது நம் பெருமைமிகு சாதனைகளில் ஒன்று.

நம்மைப் பிளவுபடுத்தாமல் வலுப்படுத்தும் வேறுபாடுகளை நாம் கொண்டாடுகிறோம்.

நல்லிணக்க உணர்வில் திளைக்கும்போது நாம் அழகிய இசையை ஒன்றுசேர்ந்து உருவாக்க முடியும் என்றார் திரு. லீ.

இன்று இன நல்லிணக்க தினத்தையொட்டிப் பிரதமர் தமது ஃபேஸ்புக் பதிவில் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டார்.

தீவு முழுதும் இன நல்லிணக்கக் கொண்டாட்டங்களில் மாணவர்கள் சேர்ந்துகொண்டனர்.

அண்டர்சன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் கல்விக்கான மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி கலந்துகொண்டார்.

பாரம்பரிய மலாய்த் திருமணச் சடங்கைப் பற்றிய கலந்துரையாடலாக அமைந்த ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டதை அவர் பார்வையிட்டார்.

நாட்டின் நிர்மாணத்தில் முன்னோடித் தலைமுறையினர் ஆற்றிய பங்கை விளக்கும் அங்கத்திலும் அவர் பங்கேற்றார்.

இன நல்லிணக்கத்தைப் போற்றி வளர்க்கும் பல்வேறு வழிகள் பற்றி டாக்டர் ஜனில் மாணவர்களுடன் கலந்துரையாடும் அங்கமும் இடம்பெற்றது.

இளம் தலைமுறையினர் மிகச் சிறந்த பல கேள்விகளை எழுப்பியதாக அவர் கூறினார்.

சவாலான, சிந்திக்கத்தக்க கேள்விகள் அவை என்றார் டாக்டர் ஜனில். 

இன நல்லிணக்கத்தையும், தேசிய அடையாளத்தையும் நாம் வரையறுத்திருக்கும் விதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் தொடர்பில் கலந்துரையாடல் அமைந்ததாக அவர் தெரிவித்தார்.

இன நல்லிணக்கம் பற்றி மாணவர்கள் யோசிப்பதைத் தெளிவாகக் காணமுடிவதாகவும் நடப்பவை அனைத்துமே அவர்களுக்கு மனநிறைவை அளிக்கவில்லை என்பது தெரிவதாகவும் டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.

நிலைமை மேம்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகவும் அதை எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதை மாணவர்கள் சிந்திப்பதாகவும் அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்