Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டவர்கள் வசிப்பதற்கு ஆக அதிகச் செலவாகும் நகரம் சிங்கப்பூர் - கருத்தாய்வு

வெளிநாட்டவர்கள் வாழ்வதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது சிங்கப்பூர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: வெளிநாட்டவர்கள் வாழ்வதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது சிங்கப்பூர்.

Economist சஞ்சிகை நடத்திய கருத்தாய்வில் அது தெரியவந்துள்ளது.

உலக அளவில் வாழ்க்கைச் செலவினம் குறித்து இவ்வாண்டு கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் முதல் 6 இடங்களில் 5 ஆசிய நகரங்கள் வந்துள்ளன.

ஹாங்காங், தோக்கியோ, ஒசாக்கா, சோல் ஆகியவை மற்ற 4 நகரங்கள். மூன்றாவது இடத்தில் சுவிட்ஸர்லந்தின் ஸூரிக் நகரம்.

ஜெனிவா, பாரிஸ், நியூயார்க், கோப்பன்ஹெகன் ஆகியவை முதல் பத்து இடங்களில் வந்தன.

வெளிநாட்டவர்களுக்கு ஆகும் இடமாற்றச் செலவுகளைக் கணக்கிட நிறுவனங்களுக்கு அந்தக் கருத்தாய்வு உதவுகிறது.

மேலும் 400க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பொருள்கள் சேவைகள் ஆகியவற்றின் விலைகளுடன் ஒப்பிடவும் அது துணைபுரிகிறது.

கார் வாங்குவதற்கும் அதற்கான செலவுகளைச் சமாளிப்பதற்கும் சிங்கப்பூர் ஆகச் செலவுமிக்க நகரம் எனத் தெரியவந்தது.

மேலும், துணிமணிகள் வாங்குவதற்கு இரண்டாவது ஆகச் செலவுமிக்க நகரம் அது என்பதையும் ஆய்வு சுட்டியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்