Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிவேக விரைவு ரயில் திட்டம் - துணை நிறுவனத்தை அமைத்தது நிலப் போக்குவரவு ஆணையம்

சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான அதிவிரைவு ரயில் திட்டத்தைச் செயல்படுத்த, சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம், SG HSR எனும் துணை நிறுவனத்தை அமைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
அதிவேக விரைவு ரயில் திட்டம் - துணை நிறுவனத்தை அமைத்தது நிலப் போக்குவரவு ஆணையம்

படம்: Channel newsAsia

சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான அதிவிரைவு ரயில் திட்டத்தைச் செயல்படுத்த, சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம், SG HSR எனும் துணை நிறுவனத்தை அமைத்துள்ளது.

அந்தத் துணை நிறுவனம் முழுமையாகவே நிலப் போக்குவரத்து ஆணையத்தின் கீழ் செயல்படும். அந்த அதிவிரைவு ரயில் திட்டத்தில், சிங்கப்பூரில் அமையவிருக்கும் பகுதி, SG HSR நிறுவனத்தின் கீழ் வரும்.

ஜூரோங் ஈஸ்ட்டில் அமையவிருக்கும் அதிவிரைவு ரயில் நிலையம், சுரங்கப் பாதைகள், ஜொகூர் நீரிணைக்கு மேல் கட்டப்படும் பாலத்தின் ஒரு பகுதி ஆகியவை அவற்றில் அடங்கும்.

SG HSR நிறுவனம், மலேசியாவின் My HSR நிறுவனத்துடன் கூட்டாகப் பணியாற்றி, சொத்துக்களைக் கண்காணிக்கும் அமைப்பு ஒன்றையும், அனைத்துலகச் செயல்பாட்டு அமைப்பு ஒன்றையும் அமைக்கவிருக்கிறது.

நியாயமான, வெளிப்படையான அனைத்துலக ரீதியான குத்தகை முறையில் அந்த நிறுவனங்கள் தெரிவு செய்யப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் சொன்னது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்