Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

திருவாட்டி ஹலிமா அதிபராகத் தெரிவு - மலேசிய, இந்தோனேசிய கவனிப்பாளர்கள் பாராட்டு

சிங்கப்பூரின் புதிய அதிபராகத் திருவாட்டி ஹலிமா யாக்கோப் தெரிவு செய்யப்பட்டிருப்பதை, மலேசிய, இந்தோனேசிய கவனிப்பாளர்கள் பாராட்டியுள்ளனர். 

வாசிப்புநேரம் -
திருவாட்டி ஹலிமா அதிபராகத் தெரிவு - மலேசிய, இந்தோனேசிய கவனிப்பாளர்கள் பாராட்டு

கோப்புப் படம்: CNA

சிங்கப்பூரின் புதிய அதிபராகத் திருவாட்டி ஹலிமா யாக்கோப் தெரிவு செய்யப்பட்டிருப்பதை, மலேசிய, இந்தோனேசிய கவனிப்பாளர்கள் பாராட்டியுள்ளனர்.

சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், நாட்டின் ஆக உயரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, தகுதிக்கு முன்னுரிமை தரும் நாடு என்னும் சிங்கப்பூரின் நற்பெயருக்கு மேலும் பெருமை சேர்த்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். 

சிறுபான்மை இனத்தவரும் பெண்களும், ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வர முடியாது என்று நிலவும் தவறான கருத்துகளை சிங்கப்பூர் முறியடித்துள்ளதாக இந்தோனேசியாவில் பெண்ணுரிமைக்குப் போராடும் கட்சி ஒன்றைச் சேர்ந்த டாக்டர் தஜேந்திரா குறிப்பிட்டார்.

இந்தோனேசியா இதை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம் என்றார் அவர்.

இந்தோனேசியாவிலோ மலேசியாவிலோ சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படிப்பட்ட உயர் பதவிக்குத் தேர்வு செய்யப்படுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்றனர் கவனிப்பாளர்கள்.

அரசியலில் பெண்களின் பங்கேற்புக் குறித்த கட்டுப்பாடுகளைத் திருவாட்டி ஹலிமா தகர்த்தெறிந்துவிட்டதாக, மலேசிய கவனிப்பாளர் திரு. முகமது ஹிசோமுதீன் பக்கார் குறிப்பிட்டார்.

மலேசியாவில், நிலைமை வேறு என்றும் அவர் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்