Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பெண்கள் தொடர்பான 280 ஆபாசக் காணொளிகளை விற்பனைக்கு விடுத்த ஆடவர் தண்டிக்கப்பட்டார்

பெண்கள் தொடர்பான 280 ஆபாசக் காணொளிகளை வைத்திருந்ததாக, ஜோஎல் சியூ வெய் சென் (Joel Chew Wei Chen) என்ற ஆடவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளியே என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
பெண்கள் தொடர்பான 280 ஆபாசக் காணொளிகளை விற்பனைக்கு விடுத்த ஆடவர் தண்டிக்கப்பட்டார்

படம்: AFP

பெண்கள் தொடர்பான 280 ஆபாசக் காணொளிகளை வைத்திருந்ததாக, ஜோஎல் சியூ வெய் சென் (Joel Chew Wei Chen) என்ற ஆடவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளியே என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

காணொளிகளை விநியோகம் செய்யும் நோக்கதோடு அவற்றை அவர் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அந்த 27 வயது விற்பனைப் பொறியாளர் ஆபாசத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் 3 இணையத் தளங்களில் உறுப்பினராக இருந்தார்.

சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த இரகசியக் கேமராக்களால் பெண்களின் அந்தரங்க நடவடிக்கைகள் படம் எடுக்கப்பட்டு அவற்றில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் காணொளிகளை எடுக்கவில்லை என்றபோதும், அவற்றின் விற்பனையில் அவர் தீவிரமாக ஈடுபட்டதை நீதிபதி சுட்டினார்.

சியூவுக்குக் குறைந்தது 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரசாங்க வழக்குரைஞர் வலியுறுத்தினார்.

சியூவின் தண்டனை விவரம், அடுத்த மாதம் 5ஆம் தேதி அறிவிக்கப்படும்.

அவருக்கு ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனையோ, $80,000 வரையிலான அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்