Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வட்டார உள்ளமைப்புத் திட்டங்களுக்கு யுவானைப் பயன்படுத்த ஊக்குவிப்பு

சீனாவின் இணைப்பும் பாதையும் திட்டத்தின்கீழ் வட்டார உள்ளமைப்புத் திட்டங்களுக்கு யுவான் நாணயத்தைப் பயன்படுத்த ஊக்குவிப்பதில் சிங்கப்பூர் சீனாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளது. 

வாசிப்புநேரம் -

சீனாவின் இணைப்பும் பாதையும் திட்டத்தின்கீழ் வட்டார உள்ளமைப்புத் திட்டங்களுக்கு யுவான் நாணயத்தைப் பயன்படுத்த ஊக்குவிப்பதில் சிங்கப்பூர் சீனாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளது.

அதன்வழி மூலதனச் சந்தைத் தொடர்புகள் வலுவடையும், இரு நாட்டு நிதி உறவுகளை மேம்படுத்த முடியும் என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியெட் கூறியுள்ளார்.

தென்சீன நகரான சியாமன்னில் நடைபெற்ற OCBC வங்கியின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் திரு. ஹெங் பேசினார்.

சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் லீ சியென் லூங்கின் பேராளர் குழுவில் திரு. ஹெங்கும் இடம்பெறுகிறார்.    

வங்கியின் புதிய கட்டடத்தின் வடிவமைப்பு தென்சீனத் தாக்கத்தைக் கொண்டுள்ளது.  சீனாவுக்கும் OCBC வங்கிக்கும் உள்ள பங்காளித்துவத்தை அது பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.

இணைப்பும் பாதையும் திட்டத்தின்கீழ் அடங்கும் நாடுகளின் அதிகாரிகளுக்கு நிதித்துறையில் பயிற்சி வழங்க சீனாவும் சிங்கப்பூரும் இணைந்து செயல்படவுள்ளதாக அமைச்சர் ஹெங் கூறினார்.

அனைத்துலக நிதி நிலையமாக விளங்கும் சிங்கப்பூர், சீனாவின் முக்கிய கொள்கை நோக்கங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று திரு. ஹெங் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்