Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மோசடித் திட்டங்களை முறியடித்த பணமாற்ற அதிகாரிகளுக்கு அங்கீகாரம்

அதிகாரிகள் போல வேடமிட்டு மோசடி செய்ய முயன்ற மாதைத் தடுத்த மூன்று பணமாற்ற அதிகாரிகள் பாராட்டப்பட்டுள்ளனர். 27 வயது திரு. சமீர் மாலிக், 35 வயது திருவாட்டி நோவியாண்டி, 29 வயது குமாரி லி ஃபாங் மூவரும் அந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.

வாசிப்புநேரம் -
மோசடித் திட்டங்களை முறியடித்த பணமாற்ற அதிகாரிகளுக்கு அங்கீகாரம்

படம்: Channel NewsAsia

அதிகாரிகள் போல வேடமிட்டு மோசடி செய்ய முயன்ற மாதைத் தடுத்த மூன்று பணமாற்ற அதிகாரிகள் பாராட்டப்பட்டுள்ளனர். 27 வயது திரு. சமீர் மாலிக், 35 வயது திருவாட்டி நோவியாண்டி, 29 வயது குமாரி லி ஃபாங் மூவரும் அந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.

மூதாட்டி பணமாற்ற மோசடியில் சந்தேக நபர் என்றும் $40,000 பணமாற்றம் செய்தால், விசாரணையை முடுக்குவதாகவும் மர்ம நபர் அவருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தார். மூதாட்டிக்கு உதவி செய்ய 50 வயது மாதை அவர் அனுப்பினார்.

பணமாற்ற நிலையத்தில் மாது நடந்து கொண்ட விதம் திரு சலீம் மாலிக்கிற்கு சந்தேகத்தை எழுப்பியது. உடனடியாக குமாரி நோவியாண்டி பணமாற்றத்தைத் தடுத்து வைத்தார். பணமாற்றம் செய்தால் மூதாட்டியின் வங்கிக்கணக்கில் $5,000 மட்டுமே எஞ்சி இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தனர். காவல்துறையிடம் புகார் கொடுத்தனர்.

மற்றொரு சம்பவத்தில் பணமாற்றம் செய்யும் போது 61 வயது முதாட்டி ஒருவர் குமாரி லியின் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க முடியாததைக் கண்டு அவர் மோசடிக்கு ஆளாகியிருக்கலாம் என்று அறிந்தார். மூதாட்டி $15,000 இழப்பதைத் தடுத்து நிறுத்தினார்.

மோசடிச் சம்பவங்கள் அதிகரித்து வந்தாலும் காவல்துறையுடன் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று பாராட்டு நிகழ்ச்சியில் காவல்துறையின் வர்த்தக விவகாரப் பிரிவின் இயக்குநர் திரு டேவிட் சியூ கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்