Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கேலிச்சித்திரத் துறை விருதுகளில் வாகைசூடிய சிங்கப்பூரர்

வில் ஐஸ்னர் (Will Eisner) கேலிச்சித்திரத் துறை விருதுகளை முதல்முறை சிங்கப்பூரரான வரகலை நாவலாசிரியர் சொனி லீயூ (Sonny Liew) வென்றுள்ளார்.

வாசிப்புநேரம் -
கேலிச்சித்திரத் துறை விருதுகளில் வாகைசூடிய சிங்கப்பூரர்

(படம்:Channel NewsAsia)

வில் ஐஸ்னர் (Will Eisner) கேலிச்சித்திரத் துறை விருதுகளை முதல்முறை சிங்கப்பூரரான வரகலை நாவலாசிரியர் சொனி லீயூ (Sonny Liew) வென்றுள்ளார்.

கேலிச்சித்திரப் படைப்புகளுக்கான ஆஸ்கார் விருதுகளாக அவை கருதப்படுகிறது.

42 வயது திரு சொனி லீயூ மூன்று விருகளைத் தட்டிச்சென்றார்.
சிறந்த எழுத்தாளர், கலைஞர் எனும் விருது அவரின் "The Art Of Charlie Chan Hock Chye" எனும் நாவலுக்கு வழங்கப்பட்டது.

1950களில் இருந்து இன்றுவரை சிங்கப்பூரர் ஒருவரின் வாழ்க்கைக் கதையை எடுத்துரைக்கும் கற்பனைக் கதை அது.

இந்த ஆண்டு அந்தப் படைப்பு அதிகப்படியாக, 6 நியமனங்களைப் பெற்றது.

உலகளவில் 50 பதிப்பாளர்களிடமிருந்து 120உக்கும் மேற்பட்ட தலைப்புகளில் கதைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
தொழில்துறை வல்லுநர்கள் வெற்றியாளர்களை இணையம் வழி வாக்களித்து தேர்ந்தெடுத்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்