Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கவுள்ள விளையாட்டு வீரர்களுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி

சிங்கப்பூர் இவ்வாண்டு, தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஆசியான் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கும் எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் விளையாட்டு வீரர்களை அனுப்பவுள்ளது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் இவ்வாண்டு, தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஆசியான் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கும் எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் விளையாட்டு வீரர்களை அனுப்பவுள்ளது.

இரண்டு போட்டிகளிலும் மொத்தம் 650 வீரர்கள் குடியரசைப் பிரதிநிதிக்கவுள்ளனர்.

அவர்களுக்குத் தேசிய கொடி வழங்கும் அதிகாரபூர்வ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சிங்கப்பூர் விளையாட்டு மையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுப் போட்டிகளுக்கு சிங்கப்பூர் இவ்வாண்டு 94 வீரர்களை அனுப்புகிறது.

தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் களம் இறங்கும் சிங்கப்பூர் அணியில் இவ்வாண்டு 569 பேர் இடம்பெற்றுள்ளனர்.

துப்பாக்கி சுடும் வீரர் ஜெஸ்மின் சர், தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கொடியை ஏந்தி செல்வார்.

உடற்குறையுள்ளோருக்கான போட்டிகளில் சுஹைரி சுஹானி அந்தப் பெருமையைப் பெறுவார்.

சிங்கப்பூர் அணி இளைய, தலைசிறந்த வீரர்களைக் கொண்டிருப்பதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் கூறினார்.

முதல்முறை இடம்பெறும் உள்ளரங்கு ஹாக்கி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளிலும் அவர்கள் திறமையுடன் திகழ்வதை திரு. டான் சுட்டினார்.

தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதமும், உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பரிலும் நடைபெறவுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்