Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'கொலை செய்யப்பட்ட முதிய தம்பதியரிடம் வேலை செய்த பணிப்பெண் படகின் மூலம் சிங்கப்பூரைவிட்டுச் சென்றிருக்கலாம்'

பிடோக் ரெசர்வோர் ரோட்டின் புளோக் 717இல் நேற்று கொலை செய்யப்பட்ட முதிய தம்பதியரிடம் வேலை செய்த பணிப்பெண் சிங்கப்பூரிலிருந்து இந்தோனேசியாவுக்குப் படகின் மூலம் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

வாசிப்புநேரம் -

பிடோக் ரெசர்வோர் ரோட்டின் புளோக் 717இல் நேற்று கொலை செய்யப்பட்ட முதிய தம்பதியரிடம் வேலை செய்த பணிப்பெண் சிங்கப்பூரிலிருந்து இந்தோனேசியாவுக்குப் படகின் மூலம் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அடுக்குமாடி வீட்டில் 79 வயது முதியவரும் 78 வயது மூதாட்டியும் மாண்டுகிடக்கக் காணப்பட்டனர்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த பணிப்பெண், ஹார்பர்பிரன்ட் (Harbourfront) நிலையத்திலிருந்து வெளியான முதல் படகில் புறப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
முதியோர் தங்கியிருந்த புளோக்கை நேற்றிரவு காவல்துறையினர் அலசினர்.குப்பைத் தொட்டிலிருந்து 3 கத்திகளை அவர்கள் கண்டுபிடித்தனர். மாண்டுபோன முதியோருடன் பணிப்பெண்ணைப் பார்த்ததில்லை என அங்கு குடியிருப்போர் தெரிவித்தனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு முதியவர் நோய்வாய்ப்பட்ட பிறகே பணிப்பெண் வேலையில் சேர்ந்ததாகவும் தெரிகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்