Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதியனவற்றை உருவாக்க ஊக்குவிக்கும் விழா

அறிவியல், தொழில்நுட்பம் இரண்டையும் பயன்படுத்தி புதியனவற்றை உருவாக்க ஊக்குவிக்கும் விழா, Maker Faire.

வாசிப்புநேரம் -

அறிவியல், தொழில்நுட்பம் இரண்டையும் பயன்படுத்தி புதியனவற்றை உருவாக்க ஊக்குவிக்கும் விழா, Maker Faire.

7ஆம் முறையாக சிங்கப்பூரில் நடைபெறும் அது, இதுவரை இல்லாத எண்ணிக்கையில் 1,000 பங்கேற்பாளர்களை ஈர்த்துள்ளது.

அவர்கள் 40க்கும் அதிகமான கூடங்களில் தங்கள் படைப்புகளைக் காட்சிக்கு வைத்துள்ளனர்.

மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் படைப்புகளும் விளையாட்டுகளும் கண்காட்சியில் இடம்பெற்றன.

அடிப்படைக் கணினிக் குறியீடு, கைவினைத் திறன்கள் ஆகியவற்றுக்கான பயிலரங்குகளும் நடத்தப்பட்டன.

முதன்முறை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த Maker மாநாட்டில், படைப்பாளர் சமூகத்தை மேலும் விரிவாக்க உதவும் வழிமுறைகளைப் பேச்சாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.

அறிவார்ந்த தேசம் இயக்கத்தின் அமைச்சராக பொறுப்பு வகிக்கும் டாக்டர் விவியன் பாலக்கிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

சமூகத்தில் உள்ளவர்களைத் தொழில்நுட்பத் துறையில் வல்லமை பெறச்செய்ய இதுபோன்ற நிகழ்ச்சிகள் முக்கியம் என்று சொன்ன அவர், மின்னிலக்க பொருளியலுக்கு அது பயன்படும் என்றார்.

தற்காலத்தில் வாடிக்கையாளரின் தேவைக்கேற்பப் பொருட்களை வழங்குவதில் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது.

வாடிக்கையாளராக இருப்பதை விட, நமக்குத் தேவையானவற்றை உருவாக்குபவராக இருப்பது மேலும் சிறந்தது என்றார்^ டாக்டர் பாலகிருஷ்ணன். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்