Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய பட்டதாரிகளில் மூவரில் ஒருவர் ஓராண்டுக்குள் வேலையிலிருந்து விலகுகிறார் - ஆய்வு

சிங்கப்பூரில் 47 விழுக்காட்டுப் புதிய பட்டதாரிகள் படிப்பை முடித்த ஒன்றிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வேலையைத் தேடிக்கொள்கின்றனர். 

வாசிப்புநேரம் -
புதிய பட்டதாரிகளில் மூவரில் ஒருவர் ஓராண்டுக்குள் வேலையிலிருந்து விலகுகிறார் - ஆய்வு

(படம்: TODAY)

சிங்கப்பூரில் 47 விழுக்காட்டுப் புதிய பட்டதாரிகள் படிப்பை முடித்த ஒன்றிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வேலையைத் தேடிக்கொள்கின்றனர்.

அவ்வாறு வேலையில் சேர்ந்த பட்டதாரிகளில் மூவரில் ஒருவர் ஓராண்டுக்குள் வேலையிலிருந்து விலகிக்கொள்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக வேலை தேடல் இணையப்பக்கமான Monster.com நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்தது.

சிங்கப்பூரில் சுமார் 500 பட்டதாரிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஒராண்டுக்கும் குறைவான காலத்தில் வேலையை விட்டு விலகிய இந்தப் பட்டதாரிகளில் 67 விழுக்காட்டினர், வேலையில் போதிய வளர்ச்சி வாய்ப்பு இல்லாததால் விலகியதாகக் கூறினர்.

42 விழுக்காட்டினர் வேறு நிறுவனத்தில் கூடுதல் சம்பளம் பெறும் நோக்கில் விலகினர். 30 விழுக்காட்டினர் வேறு துறையில் வேலை செய்ய விரும்பியதால் வேலையை விட்டு விலகினர்.

வேலை செய்யும் துறையைப் பற்றிப் போதிய அனுபவம் இல்லாதது, வேலையிடத்தில் போதிய வழிகாட்டல் கிடைக்காமற் போனது. நீண்ட நேர வேலை, வேலை செய்யும் வாழ்க்கைமுறைக்குத் தயாராக இல்லாதது-ஆகியவை பட்டதாரிகள் சந்தித்த ஆக பெரிய சவால்களில் சில.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்