Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பெலஸ்டியர் ரோடு மேம்பாலத்தில் மோதிய கனரக வாகனம்

பெலஸ்டியர்  ரோட்டில் அமைந்துள்ள பாதசாரிகளுக்கான மேம்பாலத்தை, அகழ் ஏந்திரத்தை கொண்ட ஒரு கனரக வாகனம் மோதியுள்ளது. நேற்றிரவு நடந்த அந்த சம்பவத்தை தொடர்ந்து, பெலஸ்டியர் சாலையின் ஒரு பகுது மூடப்பபட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பெலஸ்டியர் ரோடு மேம்பாலத்தில் மோதிய கனரக வாகனம்

(படம்: Christabel Seah))

பெலஸ்டியர்  ரோட்டில் அமைந்துள்ள பாதசாரிகளுக்கான மேம்பாலத்தை, அகழ் இயந்திரத்தைக் கொண்ட ஒரு கனரக வாகனம் மோதியுள்ளது. நேற்றிரவு நடந்த அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பெலஸ்டியர் சாலையின் ஒரு பகுதி மூடப்பபட்டுள்ளது.

பலமாக மோதப்பட்டதால், அந்தப் பாலத்தின் ஒரு பகுதி உடைந்துள்ளது. சம்பவம் குறித்த பல புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பலரால் பதிவேற்றப்பட்டுள்ளன.

சம்பவத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கனரக வாகனத்தை ஓட்டிச் சென்ற 57 வயது ஓட்டுனரும், அவரின் 59 வயது முதலாளியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

(படங்கள்: பிரசன்னா கிருஷ்ணன்)

ஓட்டுனரின் வாகனம் ஓட்டும் உரிமமும் கைப்பற்றப்படுள்ளது.

பெலஸ்டியர் சாலையின் இரு வழிகளும், குறிப்பாக McNair சாலைக்கும் சிராங்கூன் சாலைக்கும் உள்ள இடைப்பட்ட பகுதி தற்போது மூடப்பட்டிருக்கும் என ஃபேஸ்புக் மூலமாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்