Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான அடித்தள ரீதியான கட்டமைப்பு விரிவுபடுத்தப்படவுள்ளது

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான அடித்தள ரீதியான கட்டமைப்பு, அடுத்த ஈராண்டில் மேலும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான அடித்தள ரீதியான கட்டமைப்பு, அடுத்த ஈராண்டில் மேலும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது.

வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாளும் நோக்கில், வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிலையம் அதன் தொண்டூழியர் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.

MWC Buddies Network எனும் "வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிலையம் தொண்டூழியர் கட்டமைப்பு" 2013-ஆம் ஆண்டு தொடக்கம் கண்டது.

அதனைத் தொடர்ந்து, சுமார் 700 தொண்டூழியர்கள் அதில் சேர்ந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர், சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள்.

இவ்வாண்டு இறுதிக்குள், தொண்டூழியர் எண்ணிக்கையை ஆயிரத்துக்கு அதிகரிப்பது இலக்கு.

அடுத்த ஆண்டு இறுதிக்குள், அந்த எண்ணிக்கையை ஈராயிரத்துக்கு அதிகரிக்கவும் அந்தக் கட்டமைப்பு திட்டம் கொண்டுள்ளது.

தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்களுடன் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக, அடித்தள ரீதியான கட்டமைப்பை உருவாக்குவது பற்றி ஆராய்ந்து வருவதாக, வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிலையம் கூறியது.

உதவி தேவைப்படும் வெளிநாட்டு ஊழியர்களுடன் தொண்டூழியர்கள் தொடர்பில் இருப்பார்கள். 

உதவி தேவைப்படும் குறிப்பிட்ட சில வெளிநாட்டு ஊழியர்களை, அந்தத் தொண்டூழியர்கள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிலையத்தில் உதவி நாட ஆலோசனை கூறுவார்கள்.

அதன்மூலம், நியாயமற்ற வேலை நடைமுறைகள் போன்ற, சில அம்சங்களில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிலையம் உடனடியாகத் தலையிட்டு, நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று நம்பப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்